ADDED : ஆக 13, 2024 07:44 AM
ஈரோடு: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான நேற்று, ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜ் மாநகராட்சி மேல்நிலைபள்ளியில், போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து உறுதிமொழி வாசிக்க, மாணவர்களும் வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.
போதை பொருள் தொடர்பான தகவல் கிடைத்தால் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.பி., பிரகாஷ், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி துணை கமிஷனர் சரவண குமார், சி.இ.ஓ., சம்பத்து மற்றும் பலர் பங்கேற்றனர். இதேபோல் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகரில் உள்ள பல்வேறு கல்லுாரிகளில் நடந்தது.
* ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. எஸ்.பி., ஜவஹர் தொடங்கி வைத்தார். ஈரோடு வ.உ.சி.பூங்கா அருகில் தொடங்கிய பேரணி கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. வாசவி கல்லுாரி, சி.என்.கல்லுாரி மற்றும் நந்தா கல்லுாரி மாணவ, மாணவிகள், 300 பேர், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

