நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: அம்மாபேட்டையில் ஆதி பராசக்தி வழிபாட்டு குழு சார்பில், ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் நேற்று நடந்தது. பவானி எம்.எல்.ஏ., கருப்பணன் துவக்கி வைத்தார். அம்மாபேட்டை கரிய காளியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்து துவங்கிய ஊர்வலம், மேட்டூர் பிரதான சாலை வழியாக அம்மாபேட்டையை அடைந்தது.
அங்கு பக்தர்கள் மற்றும் மக்களுக்கு கலயத்தில் கொண்டு வரப்பட்ட கஞ்சியை பிரசாதமாக வழங்கப்பட்டது. ஊர்வலத்தில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

