sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்'

/

'காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்'

'காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்'

'காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்'


ADDED : ஆக 01, 2024 02:21 AM

Google News

ADDED : ஆக 01, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம், காவிரி ஆற்றில் சோளீஸ்வரர் கோவில் கரை ஓரப்பகுதி, அங்கன்வாடி பள்ளி முகாமை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கேட்டறிந்தனர்.

பின், அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணை நிரம்பியதால், காவிரியில் அதிகமாக தண்ணீர் வருவதை கவனத்தில் எடுத்து கொண்டு, வாய்க்காலிலும் தண்ணீர் திறக்கப்-பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 41 இடங்களை கண்டறிந்து, அவ்விடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் ஏற்கனவே தண்ணீர் வந்ததால், அங்குள்ளவர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். பவானியில் கரை ஓரத்தில் இருந்தவர்களுக்கு வேறு இடம் வழங்கப்பட்டது. அவர்கள் செல்லாததால், அங்கு பாதுகாப்பு கூடுதலாக்கப்பட்டுள்-ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அம்மா-பேட்டை, நெரிஞ்சிபேட்டை பகுதிகளிலும் தண்ணீர் கரையை ஒட்டி அதிகமாக வரும். அவை நீர் வழிப்புறம் போக்காகும். அதற்கு பதில், மாற்று இடம் கொடுத்தும், அங்கு செல்லாததால் பிரச்னை உள்ளது. தேவையான இடங்களில் படகு, டயர் போன்-றவை தயாராக வைத்துள்ளோம். யாரும் நீச்சல் அடிக்கவும், மீன் பிடிக்கவும் செல்லக்கூடாது. ஆடிப்பெருக்கு வருவதால், ஆற்-றுக்குள் இறங்கி ஏதும் ஆபத்தாக செய்யக்கூடாது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us