தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை


ADDED : ஜூலை 06, 2024 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2024 06:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு : ஈரோடு மாநகராட்சியில், 290க்கும் மேற்பட்ட காலி பணியிடங்-களை நிரப்ப, தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து துணை ஆணையர் சரவ-ணக்குமாரிடம், சங்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறி-யிருப்பதாவது: கொரோனா சிறப்பு நிதி, 15 ஆயிரம் ரூபாயை, அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

குழு பணியாளர் அனைவருக்கும் ஈ.பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டும். ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு உடனே ஓய்வூ-தியம், பணிக்கொடையை வழங்க வேண்டும். அரசாணைப்படி அகவிலை படி உயர்வு, நிலுவைத்தொகை வழங்க வேண்டும். 2014க்கு பிறகு, 290க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர் ஓய்வு பெற்றுள்ளனர். அந்த காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இவ்வாறு மனுரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us