ADDED : செப் 08, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த, சாலையோர மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு சீரமைக்கப்பட்டன.
தாராபுரம் நகரில் சாலையோரத்தில் உள்ள மரங்கள், அடர்ந்து வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக, சாலையில் செல்லும் வாகனங்களை உரசியபடி இருந்தன. இந்நிலையில் தாராபுரம் நகராட்சி ஊழியர்கள், இயந்திரம் மூலம் என்.என்.பேட்டை வீதி பகுதியில், சாலைகளை அடைத்தவாறு வளர்ந்திருந்த மரக்கிளைகளை, நேற்று வெட்டி அகற்றினர்.