/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் இன்று ஆய்வு
/
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் இன்று ஆய்வு
ADDED : செப் 04, 2024 09:05 AM
ஈரோடு: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், வீடு கட்டும் பணியை, இதுவரை துவங்காத பயனாளி-களின் வீடுகளுக்கு, அதிகாரிகள் சென்று அளவீடு பணியை துவங்க உள்ளனர்.இதுபற்றி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், ஈரோடு மாவட்ட பஞ்.,களில் நிர்வாக அனுமதி வழங்கப்-பட்டு, தற்போது வரை பணி துவங்காமல் வீடுகள் உள்ளன. இதுபற்றி விபரம் சேகரித்து, ஊரக வளர்ச்சி துறை தொழில் நுட்ப பணியாளர்கள் மூலம், வீடுகள் அளவீடு செய்யும் பணியை இன்று (4), நாளை (5) நடத்துகின்றனர். அளவீடு பணி முடிந்ததும், மண் வேலை பணிகளை துவங்க, அனைத்து பி.டி.ஓ.,க்களுக்கும் அறிவு-றுத்தியுள்ளோம்.உதவி திட்ட அலுவலர் நிலையிலான மண்டல அலுவலர், சம்மந்தப்பட்ட வட்டாரங்களில் ஆய்வு செய்து, பணி துவங்கியதற்கான அறிக்கை சமர்ப்-பிக்க உள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.