ADDED : ஜூலை 13, 2011 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பால் பண்ணைகளில் வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.கலப்பட பால் விற்பனையை தடுக்கும் வகையில் ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் ஆனந்த குமார் உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று பவானி, குறிச்சி, அந்தியூர் உள்வட்டங்களில் உள்ள, தனியார் பால் பண்ணைகள், பால் விற்பனை கடைகளில், பவானி தாசில்தார் வியாசபகவான் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.பாலின் தரம், கொழுப்பு சத்து, கலப்பம் ஆகியவை பற்றி பரிசோதிக்க, பால் மாதிரி எடுத்து, சித்தோடு 'ஆவின்' நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவின் படி, கலப்பட பால் விற்ற நிறுவனங்கள் மீது, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

