ADDED : ஜூலை 15, 2011 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: மாமனாரை தாக்கிய மருமகன் கைது செய்யப்பட்டார்.
பவானி அருகே சன்னியாசிபட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (60). இவரது மருமகன் பச்சியண்ணன் (51). இவர்களுக்கு சொந்தமாக அதே கிராமத்தில் மேல், கீழ் காடுகள் என இரு நிலங்கள் உள்ளன. வாய்காலில் தண்ணீர் விடும் பிரச்னையில் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று தண்ணீர் திறக்கப்பட்டபோது, மேல்காட்டில் இருந்து கீழ் காட்டுக்கு தண்ணீர் வந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த பச்சியண்ணன் மற்றும் அவரது மகன் தங்கமணி (21) ஆகியோர் சேர்ந்து வெங்கடாசலத்தை மண் வெட்டியால் வெட்டினர்.பவானி அரசு மருத்துவமனையில் வெங்கடாசலம் அனுமதிக்கப்பட்டார். பவானி போலீஸ் எஸ்.ஐ., தேவி விசாரித்து, பச்சியண்ணனை கைது செய்தார்.