இளம்பெண் மாயம்
ஈரோடு, ஆக. 22-
ஈரோடு, மாணிக்கம்பாளையம் சின்ன கவுண்டர் முதல் வீதி நித்யதிவ்யா இல்லத்தை சேர்ந்தவர் குமரேசன். முத்துகவுண்டம்பாளையம் ரிங் ரோட்டில் பாதாம் பால் கடை நடத்தி வருகிறார். இவர் மகள் அமுதவள்ளி, 25. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பூரை சேர்ந்த சந்தோஷ் குமாருக்கு திருமணம் செய்து வைத்தார். இவருக்கு இரண்டு குழந்தை
கள் உள்ளனர். கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்து தந்தையுடன் கடந்த இரு மாதங்களாக அமுதவள்ளி வசித்து வந்தார். தந்தைக்கு உதவியாக பாதாம் பால் கடைக்கு சென்று வந்தார். கடந்த, 17 மதியம் 2:00 மணிக்கு குமரேசன் வெளியே சென்று விட்டு, சில நிமிடங்களில் கடைக்கு திரும்பினார். அப்போது கடையில் இருந்த அமுத
வள்ளியை காணவில்லை. அக்கம் பக்கத்திலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.
குமரேசன் அளித்த புகார்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.