/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'போகியில் பழையதைஎரிப்பதை தவிருங்கள்'
/
'போகியில் பழையதைஎரிப்பதை தவிருங்கள்'
ADDED : ஜன 12, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'போகியில் பழையதைஎரிப்பதை தவிருங்கள்'
ஈரோடு :போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரித்து, காற்று மாசுபாட்டை ஏற்படுத்த வேண்டாம், என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணி, ரப்பர் பொருள், பழைய டயர், டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்களை எரிப்பதால், காற்று மாசுபாடு ஏற்படும். இதனால் மூச்சுத்திணல், கண் எரிச்சல், நுரையீரல் கோளாறு ஏற்படும். புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவர். எனவே பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.