நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிசை வீட்டில் தீ
அந்தியூர்,: அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையம், கூத்தாண்டியூரை சேர்ந்தவர் சரவணன், 43; குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மனைவி, வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு, அருகிலுள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விளக்கு விழுந்து, பொருட்களின் மீது தீ பரவி வீடு முழுக்க எரியத் தொடங்கியது. அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த, 60 ஆயிரம் ரூபாய், பிரிட்ஜ் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து விட்டது.