ADDED : ஜன 18, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ்குமார் ஜாங்கிட், செலவினங்களை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து குழுக்களுடன், நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.
போட்டியிடும் வேட்பாளரின் செலவின கணக்குகளை உரிய முறையில் கண்காணிக்க அறிவுறுத்தினார். தேர்தல் செலவினம் குறித்த புகார்களை மக்கள் தெரிவிக்க, தினேஷ்குமார் ஜாங்கிட்டை, 96009 68261 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.