ADDED : ஜன 22, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாற்றுத்திறனாளிகள் மறியல்
தாராபுரம்,:மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை, 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு சாலை மறியலில் ஈடுபட்டதால், மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள், 75 பேரையும், தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.