ADDED : ஜன 25, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருங்கத்தொழுவு நுாலகத்தில் ஆய்வு
சென்னிமலை, : சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சியில் கிளை நுாலகம் உள்ளது. கட்டடம் பல இடங்களில் சேதமாகியுள்ளது. மழை பெய்தால் ஒழுகுகிறது. இதனால் நுால்கள் நனைந்து வீணாகிறது. கட்டடத்தை பராமரிப்பு செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நமது நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வந்தது.
இதன் எதிரொலியாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்படி, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.,) பாலமுருகன், ஒன்றிய பொறியாளர்கள், ஊராட்சி தனி அலுவலர் நாகராஜ் நேற்று ஆய்வு செய்தனர். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கலெக்டர், செய்தி வெளியிட்ட நமது நாளிதழுக்கும், மக்கள் நன்றி தெரிவித்தனர்.

