ADDED : பிப் 05, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபாய நிலையில்வாய்க்கால் பாலம்
தாராபுரம் :தாராபுரம், என்.என். பேட்டை வீதியில் உள்ள ராஜவாய்க்கால் பாலம், சமீபத்தில் பெய்த மழையின் போது இடிந்தது. அப்பகுதியில் பச்சை நிற படுதா கட்டி நகராட்சி நிர்வாகம் தடுப்பு ஏற்படுத்தியது. இத்துடன் வேலை முடிந்து விட்டதாக கடந்து விட்டனர். இந்நிலையில் காற்றுக்கு படுதா பறந்து விட்டது. தற்போது வாய்க்கால் பாலம் திறந்த நிலையில் மக்களை அச்சுறுத்தி வருகிறது. மக்களின் அச்சத்தை போக்க உடனடியாக வாய்க்கால் பாலத்தை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.