ADDED : பிப் 05, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்ஜெட்டைகண்டித்து ஆர்ப்பாட்டம்
ஈரோடு : மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, மார்க்.,- கம்யூ., கட்சி சார்பில், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார்.
மத்திய பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. புதிய வேலை வாய்ப்புகளுக்கு எந்த திட்டமும் இல்லை. சமையல் காஸ் மானியம், 2,700 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மின் துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கும் செயலை நிறுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கான நலத்திட்டங்களுக்கான நிதி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாகவே பட்ஜெட் அமைந்துள்ளதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.