ADDED : பிப் 19, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வி.சி.,க்கள் போராட்டம்
தாராபுரம்:அம்பேத்கருக்கு சிலை வைக்கக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தாராபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்முத்து தலைமை வகித்தார். தனி தொகுதியாக தாராபுரம் உள்ள நிலையில், இதுவரை பல்வேறு கட்சிகளின் சார்பில் சட்டமன்ற உறுப்பினரான எவரும், சட்டமேதை அம்பேத்கருக்கு தாராபுரத்தில் சிலை வைக்க முயற்சி எடுக்கவில்லை என்று, வி.சி., நிர்வாகிகள் பேசினர். நிர்வாகிகள் செந்தில்குமார், உதயகுமார், முத்தமிழ் வேந்தன், ஆற்றலரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

