ADDED : மார் 14, 2025 01:35 AM
உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நடந்தது. கதளி கிலோ, 56 ரூபாய், நேந்திரன், 45 ரூபாய்க்கும் விற்பனையானது. பூவன் தார், 570 ரூபாய், தேன்வாழை, 730, செவ்வாழை, 910, ரஸ்த்தாளி, 710, பச்சைநாடான், 520, ரொபஸ்டா, 400, மொந்தன், 360 ரூபாய்க்கும் விற்பனையானது. விவசாயிகள் கொண்டு வந்த, 5,750 வாழைத்தார்களும், 14.56 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
*தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 11 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 14௩ ரூபாய், குறைந்தபட்சம், 110.69 ரூபாய்க்கும் ஏலம் போனது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நிலக்கடலை ஏலம் நேற்று நடந்தது. 132 மூட்டை பச்சை நிலக்கடலை வரத்தாகி ஒரு கிலோ, 29 ரூபாய் முதல் 39 ரூபாய்க்கு விற்றது. 343 மூட்டை காய்ந்த நிலக்கடலை வரத்தாகி ஒரு கிலோ, 66 ரூபாய் முதல், 71 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 187 குவிண்டால் நிலக்கடலை, 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
* புன்செய்புளியம்பட்டியில் நேற்று நடந்த கால்நடை சந்தைக்கு, 250 வெள்ளாடு, 150க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், 10 கிலோ வரையிலான வெள்ளாடு, 8,000 ரூபாய்; 10 கிலோ வரையிலான செம்மறி ஆடுகள், 700 ரூபாய் வரை விலை போனது. கோழி மற்றும் சேவல் எடைக்கு தகுந்தாற்போல்
விற்றது.
* ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 6,000 ரூபாய் முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 60 கன்றுகள், 22,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 200 எருமை மாடுகள், 22,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசுமாடுகள், 65,000 ரூபாய்க்கு மேலான விலையில் கலப்பின மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா விவசாயிகள், வியாபாரிகள் வந்திருந்து மாடுகளை ஆர்வமாக வாங்கி சென்றனர். வரத்தான மாடுகளில், 90 சதவீதம் விற்பனையானது.