/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்ணிடம் நகை பறித்தபழங்குற்றவாளி கைது
/
பெண்ணிடம் நகை பறித்தபழங்குற்றவாளி கைது
ADDED : மார் 16, 2025 01:25 AM
பெண்ணிடம் நகை பறித்தபழங்குற்றவாளி கைது
ஈரோடு:மொடக்குறிச்சி சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன்சன், 30; டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இவரது வீட்டில், 4 கிராம் எடையுள்ள தங்க காசு, 40 கிராம் எடையுள்ள வெள்ளி பொருள் திருட்டு போனது. இதேபோல் சின்னியம்பாளையம், பழனிகாடு, ராஜேந்திரன் மனைவி பானுமதி, மொபட்டில் சென்றபோது, பைக்கில் வந்த ஆசாமி, அவர் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இது தொடர்பான புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார், களவாணியை தேடி வந்தனர். இது தொடர்பாக ஈரோடு, வெண்டிபாளையம், லட்சுமி நகர், பால தண்டாயுதம் வீதியை சேர்ந்த கார்த்திக், 2௮, என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.