/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேலை வாய்ப்புடன் பயிற்சிக்கு அழைப்பு
/
வேலை வாய்ப்புடன் பயிற்சிக்கு அழைப்பு
ADDED : மார் 19, 2025 01:41 AM
வேலை வாய்ப்புடன் பயிற்சிக்கு அழைப்பு
திருப்பூ:-பிரதமரின் இன்டன்ஷிப் திட்டத்தில், முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் மாணவர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம், இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு, ஐ.டி.ஐ., - டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு தொழிற் பயிற்சி வழங்கி, நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது.
இதற்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பயிற்சி காலத்தில் ஒருமுறை உதவித்தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 21 முதல் 24 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். https://pminternship.mca.gov.in/login என்கிற போர்ட்டலில், மாணவர்கள் பதிவு செய்யலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.