ADDED : மார் 19, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஆப்சென்ட்' ஆகும்அரசு டவுன் பஸ்
சென்னிமலை:சென்னிமலையில் இருந்து திருப்பூர் மாவட்டம் நத்தக்கடையூருக்கு, தினமும் காலை, மதியம், மாலை, என மூன்று நேரமும், அரசு டவுன் பஸ் நெ-௩ இயக்கப்படுகிறது. கண்டக்டர் இல்லை எனக்கூறி அடிக்கடி பஸ் நிறுத்தப்படுகிறது. இதனால் பஸ்சை பெரிதும் நம்பியுள்ள கிராமத்து மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: நேற்று முன்தினம் காலை, 7:10 மணிக்கு நத்தக்கடையில் இருந்து சென்னிமலை வர வேண்டிய பஸ் வரவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர். இந்த பஸ்சை தொடர்ந்து இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.