/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுகாதாரத்துறை சார்பில் நடைப்பயிற்சி நிகழ்ச்சி
/
சுகாதாரத்துறை சார்பில் நடைப்பயிற்சி நிகழ்ச்சி
ADDED : மார் 20, 2025 01:33 AM
சுகாதாரத்துறை சார்பில் நடைப்பயிற்சி நிகழ்ச்சி
பு.புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி மற்றும் விண்ணப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ரெடி ஜூட் என்ற பெயரில், நடப்போம் நலம் பெறுவோம் நடைப்
பயிற்சி நிகழ்ச்சி நேற்று காலை துவங்கியது.விண்ணப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல், புங்கம்பள்ளி வரை மூன்று கி.மீ., நடை பயணம் நடைபெற்றது.
பவானிசாகர் வட்டார மருத்துவ அலுவலர் சசிகலா தலைமையில், தொடங்கிய நடை பயணத்தில் அனைத்து மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். மக்களுக்கு நடை பயணத்தை பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர்.