/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரேஷன் அரிசி கடத்தல்இருவருக்கு 'குண்டாஸ்'
/
ரேஷன் அரிசி கடத்தல்இருவருக்கு 'குண்டாஸ்'
ADDED : மார் 22, 2025 01:19 AM
ரேஷன் அரிசி கடத்தல்இருவருக்கு 'குண்டாஸ்'
நாமக்கல்:ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சேலத்தை சேர்ந்த இரண்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், கடந்த பிப்ரவரியில், குமாரபாளையம் தனியார் கல்லுாரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சரக்கு வாகனத்தில், 3,100 கிலோ ரேஷன் அரிசி கடத்திய, சேலம் சன்னியாசிகுண்டை சேர்ந்த சின்னுசாமி மகன் வெங்கடேஷ், 39, சேலம் நெத்திமேட்டை சேர்ந்த சிவக்குமார் மகன் ராஜா, 25, ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், கோவை எஸ்.பி., பாலாஜி சரவணன் பரிந்துரைப்படி, நாமக்கல் கலெக்டர் உமா, கைது செய்த இருவரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும், குண்டாசில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை, நாமக்கல் இன்ஸ்பெக்டர் சுதா வழங்கினார்.