/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பா.ஜ., மகளிரணி ஜாமினில் விடுவிப்பு
/
பா.ஜ., மகளிரணி ஜாமினில் விடுவிப்பு
ADDED : மார் 27, 2025 01:58 AM
பா.ஜ., மகளிரணி ஜாமினில் விடுவிப்பு
காங்கேயம்:டாஸ்மாக்கில் நடந்த ஊழலை கண்டித்து, சென்னையில் சில தினங்களுக்கு முன், மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்த முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில், முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டத்தில் பா.ஜ., கட்சியினர் ஈடுபட்டனர். இவ்வாறு ஈடுபட்டவர்கள் மீது போலீசார்
வழக்குப்பதிவு செய்தனர். இதன்படி காங்கேயத்தை அடுத்த நால்ரோடு அரசு மதுக்கடையில், பா.ஜ., மாவட்ட மகளிரணி நிர்வாகி புவனேஸ்வரி
தலைமையில் நிர்வாகிகள், முதல்வர் புகைப்படத்தை ஒட்டினர். இவர்கள் மீது காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கில் சம்பந்தபட்ட புவனேஸ்வரி, கலா நடராஜன், மரகதம், நிவேதா, கார்த்திகா ஆகியோரை விசாரணைக்கு வரும்படி போலீசார் சம்மன் வழங்கினர். இதன்படி அனைவரும் நேற்று, காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகினர்.
போலீசார் அனைவரையும் சொந்த ஜாமினில் விடுவித்தனர்.