ADDED : மார் 27, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போலீசாரை திட்டியலாரி டிரைவர் கைது
காங்கேயம்:காங்கேயம்-திருப்பூர் சாலையில், ஜேசீஸ் பள்ளி அருகே, காங்கேயம் போக்குவரத்து போலீசார் கருணாகரன் மற்றும் சத்யா, நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த லாரியை நிறுத்தினர். இறங்கி வந்த டிரைவரிடம் உரிய ஆவணங்களை எடுத்து வருமாறு தெரிவித்துள்ளனர். மறுத்த டிரைவர் தகாத வார்த்தை பேசியுள்ளார்.
மேலும் சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்துள்ளார். இதனால் லாரி டிரைவரான, கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டியை சேர்ந்த தினேஷ்குமாரை, 29, போலீசார் கைது செய்தனர். லாரியை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். தினேஷ்குமாரை
காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருப்பூர் சிறையில் அடைத்தனர்.