ADDED : மார் 30, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாரி டிரைவர் மீது போக்சோ
ஈரோடு:பவானி, பிரம்மதேசம் தம்மநாயக்கனுார் நடராஜன் மகன் மணிகண்டன், 24, லாரி டிரைவர். பவானியை சேர்ந்த, 10ம் வகுப்பில் இடைநின்ற, 17 வயது சிறுமியை திருமணம் செய்தார். சிறுமி எட்டு மாத கர்ப்பமாக உள்ளார். அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றதையறிந்த, குழந்தைகள் நல குழுவினர் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் மணிகண்டன் மீது, குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.