/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுவர்களை துரத்திய பாம்பால் அதிர்ச்சி
/
சிறுவர்களை துரத்திய பாம்பால் அதிர்ச்சி
ADDED : மார் 30, 2025 01:50 AM
சிறுவர்களை துரத்திய பாம்பால் அதிர்ச்சி
ஈரோடு:ஈரோடு, மூலப்பாளையம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. பழைய குடியிருப்பு என்பதால் நீதிபதிகள் யாரும் இல்லை. அக்குடியிருப்பு பராமரிப்பின்றி சுவர்கள் ஆங்காங்கே இடிந்த நிலையில் காணப்படுகிறது. குடியிருப்பு வளாகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட மா மரங்கள் உள்ளன. நேற்று பள்ளி விடுமுறை என்பதால், அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள், மா பறிப்பதற்காக நீதிபதிகள் குடியிருப்பு பகுதிக்கு சென்றனர். அப்போது, புதரில் இருந்த நாகப்பாம்பு ஒன்று, படம்
எடுத்தபடி சிறுவர்களை துரத்தியது. இதை பார்த்த மாநகராட்சி அதிகாரிகள், சிறுவர்களை பார்த்து சத்தமிட்டபடி ஓடினர். அங்கு அருகேயுள்ள கடை வியாபாரிகளும் ஓடி வர, பாம்பு மீண்டும் புதருக்குள் சென்று மறைந்தது. மாநகராட்சி அதிகாரிகளால், சிறுவர்கள் பாம்பிடம் இருந்து தப்பினர்.