/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லாரி சக்கரத்தில் சிக்கிஎலக்ட்ரீஷியன் சாவு
/
லாரி சக்கரத்தில் சிக்கிஎலக்ட்ரீஷியன் சாவு
ADDED : ஏப் 01, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாரி சக்கரத்தில் சிக்கிஎலக்ட்ரீஷியன் சாவு
அந்தியூர்:அந்தியூரில், பர்கூர் ரோட்டை சேர்ந்தவர் முருகையன், 48; எலக்ட்ரீசியன். பச்சாம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்தார். நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் உணவு வாங்க அந்தியூருக்கு மொபட்டில் சென்றார். பார்சல் வாங்கிக்கொண்டு திரும்பியபோது, அண்ணாமடுவு எடை நிலையம் அருகே, முன்னால் சென்ற போர்வெல் லாரியை முந்த முயன்றார். அப்போது தடுமாறியதில் முன் சக்கரத்தில் விழுந்ததில், இடுப்பு பகுதியில் லாரி ஏறியது. மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.