ADDED : ஏப் 02, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிநீர் கேட்டு மக்கள் மறியல்
அந்தியூர்:வெள்ளித்திருப்பூரை அடுத்த கொமரயானுார் அருகே மசக்கவுண்டனுார் காலனியில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வரவில்லை என்று கூறி, கொளத்துார் ரோட்டில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை பி.டி.ஓ., மனோகரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறவே மறியலை கைவிட்டனர்.