/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓம் காளியம்மன் கோவில்பொங்கல் திருவிழா
/
ஓம் காளியம்மன் கோவில்பொங்கல் திருவிழா
ADDED : ஏப் 03, 2025 01:50 AM
ஓம் காளியம்மன் கோவில்பொங்கல் திருவிழா
அந்தியூர்:அந்தியூர் அருகே, ஜீஎஸ் காலனியில் உள்ள ஓம்காளியம்மன் கோவில் திருவிழா கடந்த, 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. நேற்று நடந்த விழாவில், மாவிளக்கு எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டுடன் பண்டிகை நிறைவு பெறுகிறது. சுற்று வட்டார பக்தர்கள் அம்மனை தரிசனம் செயதனர்.
இதேபோல், நேற்று வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள குரும்பபாளையம் மேடு ஓம்காளியம்மன் கோவில் திருவிழாவில், 50க்கும் மேற்பட்டோர் மாவிளக்கு எடுத்து சென்றனர். மேலும், இளைஞர்கள், இளம் பெண்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

