ADDED : ஏப் 09, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்தில் லாரி டிரைவர் பலி
பெருந்துறை:பெருந்துறை, ஆர்.எஸ்.ரோடு, அசோக் நகரை சேர்ந்தவர் காமராஜ், 69, லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு ஸ்பிளண்டர் பைக்கில் பெருந்துறை நோக்கி சென்றார். எதிரே வந்த டி.வி.எஸ்., மொபட், பைக் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் காமராஜ் மற்றும் மொபட்டில் வந்த இருவர் என மூவரும் பலத்த காயமடைந்தனர். அப்பகுதியினர் மூவரையும் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் காமராஜ் வரும் வழியில் இறந்து விட்டது தெரிந்தது. மொபட்டில் வந்த இருவரும் மேற்கு வங்க மாநில தொழிலாளிகள் என்பதும், பணிக்கம்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வருவதும் தெரிந்தது. பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

