/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாலமுருகன் கோவிலில்பங்குனி உத்திர விழா
/
பாலமுருகன் கோவிலில்பங்குனி உத்திர விழா
ADDED : ஏப் 10, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமுருகன் கோவிலில்பங்குனி உத்திர விழா
ஈரோடு:ஈரோடு, பாப்பாத்தி காடு 2வது வீதி முனிசிபல் காலனி ரோடு பாலமுருகன் கோவிலில், 25ம் ஆண்டு பங்குனி உத்திர விழா இன்று (10ல்) துவங்குகிறது. இன்று காலை, 8:00 மணிக்கு கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெறுகிறது. இரவு வாண வேடிக்கை நடக்கிறது. நாளை காலை காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தக்குடம், பால் குடம், காவடி எடுத்து வருகின்றனர். பின்னர் பால முருகனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. 12ல் சுவாமி வீதி உலா நடக்கிறது.

