/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு
/
திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஏப் 11, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு
சத்தியமங்கலம்:திம்பம் மலைப்பாதை வழியாக நேற்று மாலை, கர்நாடகா மாநிலத்துக்கு சென்ற ஒரு கன்டெய்னர் லாரி, மூன்று மற்றும் நான்காவது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையிலான கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, லாரியின் பின்பக்க பாகம் சாலையில் முட்டி நின்றது. இதேபோல் மேல் நோக்கி சென்ற ஒரு லாரி ஏழாவது கொண்டை ஊசி வளைவில் ஆக்சில் கட்டாகி நின்றது. இதனால் மாலை, 5:00 மணி முதல் மலைப்பாதையில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. கிரேன் மூலம் இரு லாரிகளையும் இரவு, 8:30 மணிக்கு அப்புறப்படுத்திய பிறகே போக்குவரத்து
சீரானது.