sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாநகரில் மஹாவீர் ஜெயந்தி ஊர்வலம்

மாநகரில் மஹாவீர் ஜெயந்தி ஊர்வலம்

மாநகரில் மஹாவீர் ஜெயந்தி ஊர்வலம்


ADDED : ஏப் 11, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 01:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மாநகரில் மஹாவீர் ஜெயந்தி ஊர்வலம்

ஈரோடு:ஈரோட்டில் வாழும் ஜெயின் சமுதாயத்தினர், மகாவீர் பிறந்தநாளான நேற்று, மகாவீர் ஜெயந்தியை உற்சாகமாக கொண்டாடினர். ஈரோடு இந்திரா நகரில் உள்ள ஜெயின் கோவிலுக்கு குடும்பம் குடும்பமாக சென்று வழிபாடு நடத்தினர்.

அதன்பின் ஜெயின் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்றனர். லட்சுமி நாராயண வீதி, காவேரி சாலை, மணிக்கூண்டு, அக்ரஹார வீதி, மண்டப வீதி வழியாக மீண்டும் இந்திரா நகர் ஜெயின் கோவிலில் நிறைவு செய்தனர். இதில் வட மாநிலத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் சென்ற ஜெயின் சமூகத்தினர் சிலர் கூறுகையில், 'சமண சமயத்தின், 24வது தீர்த்தங்கரராகிய மகாவீரரின் பிறந்த தினத்தை மகாவீர் ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். அகிம்சையே தர்மம், எந்த ஜீவனையும் கொல்லக்கூடாது, எவரையும் சார்ந்திருக்க கூடாது, எவரையும் அடிமைப்படுத்தக்கூடாது போன்ற மகாவீரர் அறிவுறுத்திய சமத்துவ கொள்கையை தெரியப்படுத்தும் வகையில் ஊர்வலம் சென்றோம்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us