ADDED : ஏப் 15, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நுால் மில்லில்
தீ விபத்து
காங்கேயம்:
காங்கேயம், தம்மரெட்டிபாளையம் ஊராட்சி, ரங்காம்பாளையத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 40; இவருக்கு சொந்தமாக கழிவு பஞ்சில் இருந்து நுால் தயாரிக்கும் நுால் மில் உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு திடீரென இயந்திரத்தில் புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ பரவியது. காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் தீயில் இயந்திரம், பஞ்சு, கட்டடங்கள் சேதமானது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிகிறது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.