/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீயை அணைப்பது குறித்துமாணவர்களுக்கு பயிற்சி
/
தீயை அணைப்பது குறித்துமாணவர்களுக்கு பயிற்சி
ADDED : ஏப் 16, 2025 01:08 AM
தீயை அணைப்பது குறித்துமாணவர்களுக்கு பயிற்சி
ஈரோடு:தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கடந்த, ௧௪ம் தேதி முதல் தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு தீயணைப்பு துறை சார்பில், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நேற்று பஸ் பயணிகள், டிரைவர்-கண்டக்டர்கள், கடைக்காரர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதே போல் ஈரோடு காளை மாட்டு சிலை ரயில்வே காலனி மாநகராட்சி நடுநிலை பள்ளியில் நேற்று மதியம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும். மீட்பு பணிகளின் போது செய்ய வேண்டியவை குறித்து தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சியை செய்து காட்டினர்.
* அந்தியூர் தீயணைப்பு மீட்பு நிலையம் சார்பில், அந்தியூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், தீ விபத்து ஏற்படும் போது, எவ்வாறு தீயை அணைப்பது? பாதுகாத்துக் கொள்வது எப்படி? என ஒத்திகை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்கி, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.