/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 20, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட துணை தலைவர் ரங்கசாமி தலைமையில், ஈரோடு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கை குறித்து மாவட்ட செயலர் வெங்கிடு, தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ராஜசேகர் உட்பட பலர் பேசினர்.
தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிப்படி வருவாய் துறை கிராம உதவியாளர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், பஞ்., செயலர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். துாய்மை பணியாளர், காவலர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை துப்புறவு பணியாளர் உள்ளிட்டோரை பணி நிரந்தரம் செய்து, பணி பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தினர்.