/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காற்றாலை இயந்திரம் சாய்ந்ததால் பரபரப்பு
/
காற்றாலை இயந்திரம் சாய்ந்ததால் பரபரப்பு
ADDED : ஜூலை 10, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே காற்றாலை இயந்திரம், திடீரென சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரத்தை அடுத்த சீலநாயக்கன்பட்டியில், சென்னையில் இயங்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று காலை, 50 அடி உயரம் கொண்ட காற்றாலை இயந்திரம், தரையில் சாய்ந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அளித்த தகவலின் பேரில், சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்கள் ஆய்வு செய்தனர். திசை மாறி வீசிய பலத்த காற்று காரணமாக, இயந்திரம் சாய்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.