/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படுமா?
/
பவானியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படுமா?
ADDED : ஆக 04, 2025 08:58 AM
பவானி: பவானி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. இவற்றில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகர் பகுதியில் நாளுக்குநாள் குடியிருப்பு பெருகி வருகிறது. இதற்கு தகுந்தாற்போல் சாலை வசதி, சாக்கடை வசதியை, நகராட்சி நிர்வாகம் புதிய திட்டத்தின் மூலம் அமல்படுத்தி வருகிறது.
இந்த வகையில் பவானி மகளிர் போலீஸ் ஸடேஷன் முன்புறம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையில், சில நாட்களுக்கு முன் நகராட்சி சார்பில், 68 லட்சம் ரூபாய் மதிப்பில் சாக்கடை அமைக்கும் பணி தொடங்கியது. இதனால் சாலை குறுகலாகி விட்டது. அது மட்டுமின்றி டி.எஸ்.பி., அலுவலகம் அருகே பிரதான சாலை வளைவில், சில வியபாரிகள் கடை போட்டுள்ளனர்.
இதனால் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி வீதியில் இருந்து மெயின் ரோட்டிற்கு திரும்பும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதேபோல் பவானி பழைய பாலம் அருகே, காவேரி வீதியில் சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இப்படி நகரின் பல்வேறு பகுதிகளில் ஆக்கரமிப்புகளால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே நகராட்சி பகுதியில் ஆக்கரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அளவீடு செய்து அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.