/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓய்வூதியர் கூட்டத்துக்காக குறைகளைவரும் 10க்குள் தெரிவிக்க யோசனை
/
ஓய்வூதியர் கூட்டத்துக்காக குறைகளைவரும் 10க்குள் தெரிவிக்க யோசனை
ஓய்வூதியர் கூட்டத்துக்காக குறைகளைவரும் 10க்குள் தெரிவிக்க யோசனை
ஓய்வூதியர் கூட்டத்துக்காக குறைகளைவரும் 10க்குள் தெரிவிக்க யோசனை
ADDED : ஏப் 04, 2025 01:25 AM
ஓய்வூதியர் கூட்டத்துக்காக குறைகளைவரும் 10க்குள் தெரிவிக்க யோசனை
ஈரோடு:வரும், 25ல் நடக்க உள்ள ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டத்துக்கு, வரும், 10க்குள் ஓய்வூதியர்கள் தங்களது குறைகளை மனுவாக வழங்க வேண்டும்.
இதுபற்றி, தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் பன்னீர்செல்வம், அனுப்பிய செய்தி குறிப்பில் கூறியதாவது:
ஈரோடு கலெக்டர் அலுவலக புதிய கட்டடத்தின், முதல் தள கூட்ட அரங்கில் வரும், 25 மதியம், 3:00 மணிக்கு ஈரோடு மாவட்டத்துக்கான ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் கலெக்டர், அரசு நலத்திட்டங்கள் சிறப்பு செயலர் உட்பட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் சார்பில், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகள், அதற்கான தீர்வுகள் குறித்து மனுக்கள் முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பதிலை அதிகாரிகள் வழங்க உள்ளனர்.
எனவே ஓய்வூதியர்கள், ஓய்வு பெறுவதில் உள்ள குறைகள், மருத்துவ காப்பீடு திட்ட பணபலன்கள், ஓய்வூதியம் குறித்த இதர குறைகள் பற்றி வரும், 10 மாலை, 5:00 மணிக்குள் கலெக்டர் அலுவலக புதிய கட்டடம், 3ம் தளத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) இடம் நேரில் மனு வழங்கி, குறைதீர் கூட்டம் அன்று பதில் மற்றும் தீர்வு
பெறலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.