sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலை முருகன் கோவிலில்வரும் 14 வரை பஸ் இயக்கம்

சென்னிமலை முருகன் கோவிலில்வரும் 14 வரை பஸ் இயக்கம்

சென்னிமலை முருகன் கோவிலில்வரும் 14 வரை பஸ் இயக்கம்


ADDED : ஏப் 10, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை முருகன் கோவிலில்வரும் 14 வரை பஸ் இயக்கம்

சென்னிமலை:சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும், 4 கி.மீ., துாரம் கொண்ட தார் சாலை பழுதடைந்திருந்த நிலையில், அதை அகலப்படுத்தி போடும் பணி, ரூ.6.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்தாண்டு ஜூலை, 24ம் தேதி காணொளி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பின் வனத்துறை அளவீடு, அனுமதி என இரண்டு மாதங்கள் காலதாமதத்திற்கு பின் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணி, ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் எட்டு மாதங்களாகியும், 50 சதவீத பணிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ளது.

இதனால், மலை பாதையில் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவது இல்லை, இதனால் பக்தர்கள் படிகள் வழியாக சென்று முருகனை வழிபட்டு வருகின்றனர். பங்குனி உத்திர திருவிழா, தமிழ் புத்தாண்டு முன்னிட்டு, அதிக பக்தர்கள் வரும் நிலையில் வெயிலில் படிகள் வழியாக நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள் தடுமாறுகின்றனர். இதை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மலை பாதையில், நேற்று முதல் வரும் 14ம் தேதி வரை கோவிலுக்கு செல்ல கோவில் பஸ் இயக்கப்படும் என, நிர்வாகத்தின் சார்பாக அறிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us