/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அணையில் 15.2 மி.மீ., மழை பதிவு
/
பவானிசாகர் அணையில் 15.2 மி.மீ., மழை பதிவு
ADDED : அக் 20, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, அக். 20-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக லேசான வெயிலுடன், வானம் அவ்வப்போது மேகமூட்டமாக காணப்படுகிறது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
சில இடங்களில் துாரலும், ஒரு சில இடங்களில் மழையும் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக பவானிசாகர் அணை பகுதியில், 15.2 மி.மீ., மழை பதிவானது. தாளவாடியில்-4 மி.மீ., பெய்தது. பல இடங்களில் துாரல் மழை மட்டும் பெய்தது. மழையால் சத்தி அருகே இரு வீடுகள் பகுதியாக சேதமடைந்தன.