/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜி.எஸ்.டி., எண் மூலம் ரூ.1.80 கோடிக்குபில்லிங்: ஆடிட்டர் மீது வாலிபர் புகார்
/
ஜி.எஸ்.டி., எண் மூலம் ரூ.1.80 கோடிக்குபில்லிங்: ஆடிட்டர் மீது வாலிபர் புகார்
ஜி.எஸ்.டி., எண் மூலம் ரூ.1.80 கோடிக்குபில்லிங்: ஆடிட்டர் மீது வாலிபர் புகார்
ஜி.எஸ்.டி., எண் மூலம் ரூ.1.80 கோடிக்குபில்லிங்: ஆடிட்டர் மீது வாலிபர் புகார்
ADDED : ஏப் 03, 2025 01:31 AM
ஜி.எஸ்.டி., எண் மூலம் ரூ.1.80 கோடிக்குபில்லிங்: ஆடிட்டர் மீது வாலிபர் புகார்
ஈரோடு:ஈரோட்டில், தனது ஜி.எஸ்.டி., எண்ணை பயன்படுத்தி, 1.80 கோடி ரூபாய்க்கு பில்லிங் செய்த ஆடிட்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வாலிபர் புகார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு, வடமுகம் வெள்ளோட்டை சேர்ந்தவர் முருகானந்தம், 36. இவர், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு விபரம்:ஈரோடு அடுத்த முள்ளாம்பரப்பில், எம்.எஸ். எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில், 2017ல் கடை துவங்கி ஜி.எஸ்.டி. எண் எடுத்து நடத்தினேன். நஷ்டம் காரணமாக, 2021ல் கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. மேட்டூர் சாலையில் அலுவலகம் வைத்திருந்த ஆடிட்டர் உதயகுமாரை அணுகி, ஜி.எஸ்.டி., எண்ணை, 'க்ளோஸ்' செய்ய நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டேன். 2022 டிசம்பரில் ஜி.எஸ்.டி., ரத்து செய்ய கோரி இருக்கிறீர்கள். விரைந்து ரத்து செய்யப்படும் என, மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. ரத்து செய்யப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.
ஆனால், 2023 ஜூனில் கரூர் அலுவலக வணிக வரித்துறையில் இருந்து எனக்கு கடிதம் வந்தது. அதில், வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்று இருந்தது. ஆங்கிலத்தில் அறிக்கை இருந்ததால் ஆடிட்டரிடம் கேட்டேன். அவர், ஜி.எஸ்.டி., ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார். 2023 ஆகஸ்டில், கரூர் வணிக வரித்துறை அலுவலகத்தில் இருந்து, போனில் அழைத்து வரி பாக்கியை செலுத்த அறிவுறுத்தினர். ஜி.எஸ்.டி., ரத்து செய்ததாக நான் கூறினேன். அவர்கள் கரூர் அலுவலகம் வருமாறு அழைத்தனர்.
இது தொடர்பாக, ஆடிட்டர் உதயகுமாரை பலமுறை போனில் அழைத்தேன். அழைப்பை அவர் ஏற்கவில்லை. பின்னர், கரூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்தேன்.
ஜி.எஸ்.டி., செலுத்துவதற்கான இணையத்தின் யூசர் நேம், பாஸ்வேர்டை கேட்டனர். அது ஆடிட்டருக்கு மட்டுமே தெரியும் என கூறினேன். பின் நடந்த விசாரணையில் ஆடிட்டர் உதயகுமார், ஆறு நிறுவனங்களுக்கு எனது ஜி.எஸ்.டி., எண் மூலம் ரூ.1.80 கோடிக்கு பில்லிங் செய்தது தெரியவந்தது. 2022 செப்., முதல் நான்கு மாதங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
ஜி.எஸ்.டி.,யாக, ரூ.35 லட்சம் செலுத்த வேண்டும் என்று கடந்த, 28ல், கரூர் அலுவலக வணிக வரித்துறையில் இருந்து மீண்டும் கடிதம் வந்துள்ளது. ஜி.எஸ்.டி., எண்ணை ரத்து செய்வதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட ஆடிட்டர் உதயகுமார் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

