/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தள்ளுவண்டியில் புகையிலை பொருள்விற்பனை; ரூ.25 ஆயிரம் அபராதம்
/
தள்ளுவண்டியில் புகையிலை பொருள்விற்பனை; ரூ.25 ஆயிரம் அபராதம்
தள்ளுவண்டியில் புகையிலை பொருள்விற்பனை; ரூ.25 ஆயிரம் அபராதம்
தள்ளுவண்டியில் புகையிலை பொருள்விற்பனை; ரூ.25 ஆயிரம் அபராதம்
ADDED : மார் 20, 2025 01:43 AM
தள்ளுவண்டியில் புகையிலை பொருள்விற்பனை; ரூ.25 ஆயிரம் அபராதம்
ஈரோடு:ஈரோடு, காவிரி சாலையில் தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்பட்ட, 5 கிலோ குட்கா, 1.5 கிலோ பீடி, சிகரெட்டை பறிமுதல் செய்த மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
ஈரோடு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் இணைந்து, காவேரி சாலையில் உள்ள மளிகை கடை, டீ கடை, தள்ளு வண்டி என, 20க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கருங்கல்பாளையத்தை சேர்ந்த பாபுவுக்கு சொந்தமான தள்ளுவண்டி கடையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த, 5.3 கிலோ குட்கா மற்றும் 1.5 கிலோ பீடி, சிகரெட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் பாபுக்கு, 25 ஆயிரம் ரூபாயை அபராதமாக அதிகாரிகள் விதித்தனர்.