/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நொய்யல் ஆற்றில் பாய்ந்தகார்; 3 பேர் படுகாயம்
/
நொய்யல் ஆற்றில் பாய்ந்தகார்; 3 பேர் படுகாயம்
ADDED : ஏப் 01, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொய்யல் ஆற்றில் பாய்ந்தகார்; 3 பேர் படுகாயம்
சென்னிமலை:சென்னிமலை அருகே ஈரோடு-திருப்பூர் மாவட்ட எல்லையான நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. பாலம் வழியாக சென்னிமலையை நோக்கி நேற்று வந்த ஒரு கார், வேகத்தடையை கடந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப்பகுதிக்குள் செல்லும் பாதையில் நுழைந்து தலைகுப்புற கவிழ்ந்தது. ஓட்டுனர், காரில் வந்த இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியினர் மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

