/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜாதி சான்றிதழ் கேட்டு "பண்டி' இனத்தவர் கலெக்டரிடம் மனு
/
ஜாதி சான்றிதழ் கேட்டு "பண்டி' இனத்தவர் கலெக்டரிடம் மனு
ஜாதி சான்றிதழ் கேட்டு "பண்டி' இனத்தவர் கலெக்டரிடம் மனு
ஜாதி சான்றிதழ் கேட்டு "பண்டி' இனத்தவர் கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 12, 2011 12:45 AM
ஈரோடு: ஜாதியின் உட்பிரிவை குறிப்பிட்டு சான்று வழங்க கோரி, 'பண்டி' இனத்தவர் மனு கொடுத்தனர்.
கோபி தாலுகா காசிப்பாளையம், 'பண்டி' ஜாதி அமைப்பாளர் திருமுருகன் தலைமையில், நூற்றுக்கணக்கான மக்கள், நேற்று கலெக்டரிடம் வழங்கிய மனு: கோபி தாலுகா காசிபாளையத்தில் வசிக்கிறோம். கொங்கு போயர், பண்டி போயர் சமூகத்துக்குள் பழக்கவழக்கம், கலாச்சாரம், திருமணம், இறப்பு சடங்கு ஆகியவற்றில் பல வேறுபாடு உள்ளது. கொங்கு போயருக்கும், பண்டி போயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கோபி தாலுகாவில் 300க்கும் மேற்பட்டோர் பண்டி ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளனர். தற்போது, கோபி தாசில்தார் இவ்வின மக்களை அலைக்கழிக்கிறார். ஒரே குடும்பத்தில் உள்ள தந்தை, அண்ணன், அக்கா என, பலருக்கும் பண்டி சான்றிதழ் வழங்கிவிட்டு, அடுத்த வாரிசுகளுக்கு அதுபோல் ஜாதி சான்றிதழ் வழங்க மறுக்கிறார். மத்திய, மாநில அரசுகளின் சலுகை கிடைக்காமல், பள்ளி, கல்லூரி குழந்தைகள் பின்தங்கிய நிலையில் உள்ளனர். முழுமையான விசாரணை நடத்தி, எங்களுக்கு 'போயர்' என, சான்றிதழ் வழங்காமல், அதன் உட்பிரிவான 'பண்டி' என ஜாதிச்சான்றிதழ் வழங்க, கோபி தாசில்தாருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

