sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயில் டிரைவர்கள் 36 மணி நேர உண்ணாவிரதம்

ரயில் டிரைவர்கள் 36 மணி நேர உண்ணாவிரதம்

ரயில் டிரைவர்கள் 36 மணி நேர உண்ணாவிரதம்


ADDED : பிப் 21, 2025 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 12:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ரயில் டிரைவர்கள் 36 மணி நேர உண்ணாவிரதம்

ஈரோடு:ரயில் டிரைவர்களின் குறைகளை தீர்ப்பதில், ரயில்வே அமைச்சகத்தின் மனப்பான்மையை கண்டித்து, நாடு முழுவதும் லோகோ பைலட்கள் (ரயில் டிரைவர்), நேற்று காலை, 8:00 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர். இன்று இரவு, 8:00 மணி வரை, 36 மணி நேரம் போராட்டம் அறிவித்துள்ளனர்.

ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன் நடந்த போராட்டத்துக்கு, அனைத்து இந்திய லோகோ ஓட்டுனர் கழக சேலம் கோட்ட பொருளாளர் சீனிவாச பட் தலைமை வகித்தார். தென் மண்டல துணை தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

வேலை நேரத்தை, 10 மணி நேரமாக குறைக்க வேண்டும். தொடர் இரவு பணியை இரண்டாக குறைக்க வேண்டும். 36 மணி நேரத்துக்குள் வீடு திரும்ப வழிவகை செய்ய வேண்டும். 30 மணி நேர வார ஓய்வுடன் வழக்கமான, 16 மணி நேர ஓய்வை எடுக்க அனுமதிக்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 16 அம்ச கோரிக்கை வலியுறுத்தி, இந்த உண்ணாவிரதம் நடக்கிறது. தென்னக ரயில்வே அளவில் திருவனந்தபுரம், பாலக்காடு, சென்னை, திருச்சி, ஈரோட்டில் போராட்டம் நடக்கிறது. அதேசமயம் சேலம் ரயில்வே கோட்டத்தில் ஈரோட்டில் மட்டும் உண்ணாவிரதம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us