sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு மாவட்டத்தில் 36 முதல்வர் மருந்தகம் திறப்பு

ஈரோடு மாவட்டத்தில் 36 முதல்வர் மருந்தகம் திறப்பு

ஈரோடு மாவட்டத்தில் 36 முதல்வர் மருந்தகம் திறப்பு


ADDED : பிப் 23, 2025 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2025 01:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு மாவட்டத்தில் 36 முதல்வர் மருந்தகம் திறப்பு

ஈரோடு :-ஈரோடு மாவட்டத்தில் நாளை, 36 முதல்வர் மருந்தகங்கள் துவக்கப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில், தமிழகம் முழுவதும், 1,000 முதல்வர் மருந்தகங்களை திறக்கப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம், 22 இடங்களிலும், தனியார் தொழில் முனைவோர் மூலம், 14 என, 36 முதல்வர் மருந்தகம் நாளை திறக்கப்படவுள்ளது. முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சியில் இவற்றை தொடங்கி வைக்கிறார்.

ஈரோடு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம், அவல்பூந்துறை மற்றும் சிவகிரி; நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வீரப்பன்சத்திரம், காசிபாளையம், திண்டல்மலை, நசியனுார், பி.பெ.அக்ரஹாரம், லக்காபுரம் புதுார் மற்றும் மொடக்குறிச்சி; தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விளக்கேத்தி, காஞ்சிகோயில், கொளப்பலுார், கரட்டடிபாளையம், கெம்பநாயக்கன்பாளையம், கவுந்தப்பாடி, நம்பியூர், பெரியகொடிவேரி, துாக்கநாயக்கன்பளையம், பெரியவடமலைபாளையம் மற்றும் அரியப்பம்பாளையம்; வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் சத்தி மற்றும் புஞ்சை புளியம்பட்டி கூட்டுறவு பண்டக சாலை என, 22 இடங்களிலும், முதல்வர் மருந்தகம் திறக்கப்படுகிறது.

தனிநபர் சார்பில் சோலார் புதுார், அக்ரஹார தெரு ஈரோடு, ஈஸ்வரன் தெரு ஈரோடு, வெட்டுக்காட்டுவலசு ஈரோடு, சத்தி ரோடு வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, சென்னிமலை, கோபி, குருமந்துார் மேடு, அத்தாணி, விநாயகர் கோவில் தெரு காசிபாளையம், ஓடத்துறை மெயின்ரோடு தாழைக்கொம்பு புதுார், சின்னமொடச்சூர் கோபி, பவானி மெயின் ரோடு சலங்கபாளையம் என, 14 இடங்களிலும் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட உள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us