/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேசிய திறனறிவு தேர்வு6,865 பேர் எழுதினர்
/
தேசிய திறனறிவு தேர்வு6,865 பேர் எழுதினர்
ADDED : பிப் 23, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய திறனறிவு தேர்வு6,865 பேர் எழுதினர்
திருப்பூர்:அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறிவு தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, 4 ஆண்டுக்கு, அதாவது, 9ம் வகுப்பு துவங்கி, பிளஸ் 2 வகுப்பு படிக்கும் வரை, மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான தேர்வு, மாநிலம் முழுக்க நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட அளவில், 24 மையங்களில் தேர்வு நடந்தது. காலை, 9:30 மணி முதல், மதியம், 1:00 மணி வரை தேர்வு நடந்தது. மொத்தம், 7,047 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 182 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.

