ADDED : ஆக 31, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. இதில், 301 கிலோ எடையில், 586 தேங்காய் வரத்தானது.
ஒரு கிலோ சராசரியாக, 29 ரூபாய்க்கு விலை போனது. வரத்தான அனைத்து தேங்காய்களும், 8,731 ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.